Sunday, 13 April 2014

அறநெறி தனிமை


அருண் ஜெட்லி
 

(எதிர்க்கட்சித் தலைவர், மாநிலங்களவை)
 
 
 
 
 
இரண்டு மாதங்களுக்கு முன்பு, குஜராத்தில் “உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கைப் பற்றி விசாரிப்பதற்காக ஒரு விசாரணை ஆணையத்தை அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. இந்த அடிப்படையில் ஏற்கனவே ஒரு விசாரணை ஆணையத்தை குஜராத் அரசு நியமித்தது. மத்திய அரசின் குறுக்கீடு அரசியல் ரீதியிலானது. குஜராத் அரசுக்கும் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் திரு. நரேந்திர மோதிக்கும் தொல்லை கொடுப்பதே அவர்களுடைய எண்ணம். 


மத்திய அரசின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தப்பட்டது மட்டுமல்லாமல், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையம் பழிவாங்கும் எண்ணமும், அகந்தையும் கொண்டதாக விளங்கியது. அகந்தையானது, கடந்த பத்தாண்டு கால ஐ.மு.கூ. அரசின் அடையாளமாகும். அகந்தையானது அரசியல் வீழ்ச்சிக்கு நிச்சய உத்தரவாதமாகும். அகந்தை உள்ளவரிடம் பணிவு இருக்காது. அவர்களது நடத்தையை ஏற்றுக்கொள்ளாத சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளில் இருந்து அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
                  அந்த ஆணையத்திற்கு என்ன நடந்ததுஆணையத்திற்குத் தலைமையேற்பதற்கு ஒருவர் மாற்றி மற்றவராக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள் தொடர்பு கொள்ளப்பட்டனர். இந்த அரசியல் மயமான நடவடிக்கையில் ஈடுபட அவர்கள் மறுத்துவிட்டார்கள். அதன் பிறகு, ஓய்வு பெற்ற சில உயர்நீதிமன்ற நீதிபதிகளும் தொடர்பு கொள்ளப்பட்டனர். இது போன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ள முடியாது என்று அவர்களும் தெளிவுப்படுத்திவிட்டார்கள். அதிகாரத்தின் வண்ணமயமான நடவடிக்கையில் ஒத்துழைப்பதற்கு ஒருவரும் முன்வராமல் அரசு தனிமைப்படுத்தப்பட்டது.                 
 
அதே போன்று, லோக்பாலுக்கான தலைவர்  மற்றும் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்வு கமிட்டியை நியமிக்கும் போது, பிரதமரும், அவரது கருத்துக்களை தேர்வு கமிட்டியின் பகிர்ந்தவர்களும் நீதியரசர் வெங்கடாசலய்யா, பாலி எஸ். நாரிமன், சோலி ஜே. சோப்ராஜி, கே. பராசரன், கே.கே. வேணுகோபால், ஹரீஷ் சால்வே போன்ற எந்த ஒரு பிரபலமான பெயரையும் சட்ட நிபுணர் பிரிவின் கீழ் தேர்வு கமிட்டியில் இடம்பெறுவதை ஏற்க மறுத்துவிட்டார்கள். பரிந்துரை கமிட்டி நியமிக்கப்பட்டப்போது, அரசு நினைத்த மூன்று அரசு வழக்கறிஞர்களில் ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்களை நியமிக்குமாறு பரிந்துரை செய்தது. அதை திருமதி. சுஷ்மா சுவராஜ் ஏற்க மறுத்துவிட்டார்.                 
 
லோக்பால் மற்றும் லோக் ஆயுத்தா சட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட விதிகள் சட்டத்திற்கு மாறாக இருந்ததை 2014 ஜனவரி 20ஆம் தேதி மற்றும் 2014 ஜனவரி 30ஆம் தேதி ஆகிய தேதிகள் இட்ட கடிதங்களின் வழியாகப் பிரதமருக்குத் வலியுறுத்தினேன். தேர்வு கமிட்டி மற்றும் பரிந்துரை கமிட்டியின் செயல்பாடுகளை அவர்கள் தட்டிப் பறித்தார்கள். குறிப்பாக பரிந்துரை கமிட்டியின் பணி வெறும் எழுத்தர் அளவுக்குக் குறைந்தது. தகுந்த காரணங்கள் இல்லாமல் எனது ஆட்சேபங்கள் மீறப்பட்டன. தேர்வு கமிட்டி மற்றும் பரிந்துரை கமிட்டியின் செயல்பாடுகளை   பணியாளர் துறை தட்டிப் பறித்துக்கொண்டதாக வாதிட்டேன். தேர்வுக்கான முடிவெடுக்கப்பட்ட நிபந்தனைகளின் படி, தேர்வு கமிட்டியின் கூட்டம் நடைபெறவில்லை. பிரபலமான நபர்கள் லோபாலின் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக அழைக்கப்பட வேண்டும். அவர்களது கண்ணியத்திற்கும், சேல்வாக்கிற்கும் ஏற்ற வகையில் பயன்பாடுகள் அமைய வேண்டும்.                 
 
இது போன்ற காரணங்களைக் காட்டி திரு. பாலி எஸ். நாரிமனும், நீதியரசர் கே.டி. தாமசும் பரிந்துரை கமிட்டியில் பணியாற்ற மறுத்துவிட்டார்கள். நடைபெற்றுக்கொண்டிருக்கும் செயல்முறையானது பணிக்காக சிறந்த மனிதனைத் தேர்ந்தெடுக்கும் நோக்கம் கொண்டதல்ல என்று அவர்கள் நம்புகிறார்கள். லோக்பால் அமைப்பு அதன் தோற்றத்திற்கு முன்னதாகவே சேதமடைந்து விடும் என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது. எப்போது அரசின் நோக்கங்களில் சந்தேகமடைந்து தேர்வு மற்றும் பரிந்துரை நடைமுறைகளில் பிரபலமான, புகழ் பெற்ற சிறந்த மனிதர்கள் பங்கு பெற மறுத்துவிட்டார்களோ, அப்போதே அறநெறி தனிமை முழுமையடைந்துவிட்டது.

 
 

No comments:

Post a Comment