Sunday, 13 April 2014

தவறு நிகழ்ந்தால்




நாள்: 17 மார்ச், 2014

அருண் ஜெட்லி

(எதிர்க்கட்சி தலைவர், மாநிலங்களவை)
 
 
 
சில விஷயங்கள் நன்றாக சென்றுகொண்டிருக்கிறது என்றால் அது நன்றாகவே அமையும். அது நன்றாக செல்வதில் ஏதேனும் கடினம் இருந்தால் அவை தகர்ந்துவிடும். அதுதான் ஐமுகூ மற்றும் ராகுல்காந்தி கதையிலும் நிகழ்ந்துள்ளது. பிரச்னைகளை அனுபவித்து, மூத்த தலைவர்களும் கூட மூழ்கும் கப்பலிலிருந்து குதித்து விட முடிவெடுத்துள்ளார்கள். சிலர் போட்டியிட மறுப்பு தெரிவிக்கிறார்கள். மற்றவர்கள் போட்டியிடாததற்கு உடல் நலம் சரியில்லை என்று காரணம் கூறுகிறார்கள். பழிபோடும் விளையாட்டும் தொடங்கியாகிவிட்டது. .

பல பிரச்னைகளை அனுபவித்த பிறகு, ராகுல் காந்தி அவரது கட்சியின் உறுதித்தன்மையைப் பற்றி பேச முடிவெடுத்திருக்கிறார். கருத்துக்கணிப்புகள் கேலிக்கூத்துகள் என்று கூறும் அவர் இத்தேர்தலில் காங்கிரஸ் 2009 தேர்தல் முடிவை விடவும் அதிகம் வளரும் என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ்காரர்களின் மூழ்கிக்கொண்டிருக்கும் உறுதித்தன்மையை மீட்டுக்கொண்டு வரும் பொருட்டு கூறப்பட்ட வெளிப்படையான உத்தியாக இது இருந்தால் அது புரிந்துகொள்ளக்கூடியதாகும். ஆனால், அவர் உண்மையிலேயே இதுதான் உண்மை என்று நம்பினால் பிறகு அவர் உண்மையிலிருந்து தன்னை முற்றிலும் துண்டித்துக்கொண்டுள்ளார் என்பதுதான் உண்மையான விஷயம்.
தேர்தல் செயற்பட்டியல் அவர்களுக்கு முற்றிலும் எதிராக திணிக்கப்பட்டிருக்கிறது. வளர்ச்சி மேம்பாடு, அமைப்புகளைச் சரியான இடத்தில் அமர்த்துதல் போன்ற சரியான நோக்கங்கள் கொண்ட கொள்கைகளுக்குப் புறம்பாக செயல்திட்டங்களை உருவாக்க தீவிரமான முயற்சிகளைச் மேற்கொள்வது அரசுப்பணி செய்வதாகாது. நாடு முழுவதும் விளம்பரத்தட்டிகளில் எழுதப்பட்டுள்ள கோஷங்களெல்லாம் புரிந்துகொள்வதற்கு முற்றிலும் கடினமானதாக இருக்கின்றன. அது சொல்லும் செய்தியும் தட்டையாகவும் தெளிவில்லாமலும் இருக்கின்றன. வாக்காளர்கள் விலைவாசி அதிகரிப்பு, பொருளாதாரம் மற்றும் ஊழல் பற்றி மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். உறுதியான மற்றும் ஊக்கமூட்டும் முன்னுதாரமான தலைமையைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். காங்கிரசும் ஐமுகூ அரசும் செயல்திட்டங்களை வகுப்பதில் தோற்றுவிட்டது. ஆனால் எதிரணிகளால் வகுக்கப்பட்ட செயல்திட்டங்களுக்கு எதிர்வினையாற்றுவதில் மட்டும் சிறந்து விளங்குகிறது.
கடந்த பத்தாண்டுகளாக செல்லம் அனுபவித்து வந்த சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி இரண்டும் தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிச் செல்ல முடிவெடுத்துள்ளது. மற்றவர்களும் அவர்களைத் தொடர்ந்து விலக ஆரம்பிக்கிறார்கள். திரினாமூல் காங்கிரஸ், திமுக மற்றும் எல்.ஜே.பி ஆகியோரும் காங்கிரசை தனியே விட்டு விலகியுள்ளனர். இனி எந்த ஒரு புதிய அணியும் அவர்களோடு சேர்வதற்கு இல்லை. ஐமுகூ அணி முந்தைய தேர்தலில் வெற்றி பெற்ற பெரும்பாலான சீட்டுகள் தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசத்திலிருந்து கிடைத்தவை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஒற்றை இலக்க சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெறத்தக்க வகையில் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது. ஆகவே அது ஒரு சீட்டு கூட வெல்லும் என்ற எதிர்பார்ப்பு சுத்தமாக இல்லை. ஆந்திர பிரதேசத்தில் அது தன் தெலங்கானா துருப்புச்சீட்டை, குற்றங்களுக்கு வெளியே இல்லாவிட்டாலும் கூட வாக்கு வங்கி உத்திக்கு வெளியே பயன்படுத்தி இருக்கிறது. அது சீமாந்திரா பகுதியில் உள்ள அதன் வேட்பாளர்களின் பொறுப்புடைமையாக மட்டுமே மாறியது. தெலங்கானாவில், டி.ஆர்.எஸ் காங்கிரசிடமிருந்து முகம் திருப்பிக்கொண்டது.
தெலங்கானாவிற்கான அணுகுமுறையை மீளாய்வு செய்வதற்கான வாய்ப்புகள் பாஜகவிற்கு இருக்கின்றன. ஆனால் நாங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தோம். பதிலாக நாங்கள் நேரடியாக செயலில் இறங்கினோம். நாங்கள் தெலங்கான மக்களுக்கான எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றினோம் மேலும் சீமாந்திராவிற்கு கூடுதல் பொருளாதார அம்சங்களைப் பெற்றோம். எங்களால் இரண்டு பகுதிகளுக்குமே தலை நிமிர்ந்தபடி செல்ல முடியும். இதனால் நாங்கள் மக்கள் மத்தியில் மட்டுமல்லாது மாநிலத்தின் உள்ளூர் பகுதிகளின் கட்சிகளிடமிருந்தும் நன்மதிப்பை பெற்றிருக்கிறோம். இன்று தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசம் இரண்டிலுமுள்ள கூட்டணி கட்சிகளுடன் நேர்மறையான செல்வாக்கைப் பெற்றுள்ளோம்.
ஆனால் காங்கிரஸ், அதன் தலைமையே கூட ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. அது ஆற்றலோ அல்லது இன்றைக்கு தேவையான அம்சங்களோ கொண்டிருக்கவில்லை. இறுதியில் காங்கிரஸ் செயல்திட்டங்கள் ஏதுமின்றி,  திறனற்ற கூட்டணிகளோடு வலிமையான தலைமையும் இன்றி வாக்கெடுப்புக்குச் செல்ல இருக்கிறது. நடப்பதில் தவறுகள் நிகழ்ந்தால் அனைத்தும் தவறாகவே முடிவும்.

No comments:

Post a Comment