தேதி : 14
மார்ச், 2014

அருண் ஜெட்லி
(மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்)
கடந்த இருபத்தி
நான்கு மணி நேரத்தில் நான் கேள்விபட்ட இரண்டு முக்கிய விஷயங்கள் என்னை வருத்தமுற செய்தன.
லண்டனில் வெளியுறவுத்துறை
அமைச்சர் சல்மான்குர்ஷித் ஒரு உரை நிகழ்த்தினார்.
அவரது உரையின் மத்தியில் உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அவர்களது வரம்பை மீறுவதாகக் குற்றம்சாட்டினார். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எப்போதும் இறையாண்மையின் சின்னங்களாக விளங்குவதால்
ஒரு சில தேர்ந்தெடுக்கப்படாத பிரதிநிதிகள் இந்திய ஜனநாயகத்தை வழிநடத்த முடியாது என்று
அவர் நம்புகிறார். இந்த வாதம் தவறாக சிந்திக்கப்பட்டதும், தவறாகவழிநடத்தப்பட்டதும்ஆகும்.
இந்திய அரசியல்
சட்டத்தின் கீழ் அதிகாரங்கள் தெளிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சட்டத்தைப் புரிந்துகொள்ளும் பொறுப்பானது நீதிமன்றங்களிடம் உள்ளது. சட்டமன்றத்தால் கட்டமைக்கப்பட்ட எந்த சட்டத்தில் அரசியல் சட்டவரம்பையும் நீதிமன்றத்தால்
பரிசீலனை செய்ய முடியும். நிர்வாக நடவடிக்கைகளை நீதிமன்றம் சட்டரீதியாக ஆய்வு செய்ய முடியும். நீதிமன்றம் அதன் வரம்பின் எல்லையை முடிவு செய்யும். சாதாரணமாக, நிர்வாகம் செய்யும் விதத்தில் நீதிமன்றங்கள் அதன் விவேகத்தைப்
பயன்படுத்தவில்லை. திட்டம் தீட்டுதல் நிர்வாகத்தின் பணி. சட்டம் இயற்றுதல் சட்டமன்றத்தின் பணி.
அவர்களுடைய செயல்பாடுகளை ஆய்வு செய்யும் பொருட்டு நீதித்துறைக்கு எப்போதும்
அவற்றில் தலையிடவும் மற்றும் அரசியலமைப்புத் தன்மையற்ற அல்லது வரைமுறையற்ற
சட்டங்களைத் தடுக்கவும் உரிமையுண்டு. நீதிமன்றம் நிர்வாகிகளைச் சட்ட ஆணைகளைப்
பின்பற்றுமாறு வழிநடத்த முடியும். மேலும் நிர்வாகிகள் முடிவெடுக்கு சமயத்தில்
குறிப்பிட்ட விதத்தில் அவர்கள் செயல்படுவதற்கான காரணங்கள் சரியாக இருக்கிறதா
என்பதை உறுதி செய்யவும் நீதிமன்றம் விரும்பலாம். அனைத்து முடிவுகளும் தகுந்த
காரணங்களோடுதான் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அக்காரணங்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்
வெறுமனே இருப்பதாகத் தெரிவிக்கப்படக் கூடாது. சட்டம் மற்றும் நீதித்துறையின்
ஆய்வுகள் பற்றிய விளக்கம் அளிக்கும் நடவடிக்கையில், நீதிமன்றம்
அரசியலைப்பின்படியும் காரணங்களோடும் தேவையான காரணிகளை வகுத்துக்கொள்ளலாம். நாம்
அதனை நீதிபதி உருவாக்கிய சட்டம் என்றும் வேண்டுமானால் அழைத்துக்கொள்ளலாம். நிர்வாகிகளுக்கான
விதிகள்/நிபந்தனைகள்/வழிமுறைகள் ஆகியவற்றை நீதிமன்றம் உருவாக்கும் சமயங்களில் இந்தக்
கூற்று உண்மையாகிறது. சமீப ஆண்டுகளில்,
அதிகாரப் பிரிப்புகள் எல்லாம் சில நீதித்துறை அறிவிப்புகளால் முற்றிலும்
தவிர்க்கப்பட்டுள்ளன. ஆனால் இவை விதிவிலக்குகளானவை. அவற்றில் குழப்பங்களும்
இருக்கலாம். அவை இந்திய
நீதித்துறையின் வழக்கமான செயல்முறைகளை எந்த விதத்திலும் வெளிப்படுத்தவில்லை.
தேர்தல்
ஆணையம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
சுதந்திரமாகவும்,
நேர்மையாகவும் தேர்தல்களை நடத்தும் பொறுப்புமிக்க
முதன்மையான அமைப்பு இது. அது நன்றாகவே
நடந்து கொள்கிறது.. சுதந்திரமான
நேர்மையான தேர்தல்கள் மற்றும் சுதந்திரமான நீதித்துறை ஆகியவற்றால் இந்திய ஜனநாயகம்
நன்றாகவே நிலைபெற்றுள்ளது. சுதந்திரமான ஊடகம், துடிப்பான நாடாளுமன்ற ஜனநாயகம்
ஆகியவை இந்திய ஜனநாயக மரபை மேலும் வலுப்படுத்துகின்றன. நடத்தை விதியானது முதலில் நிலையாக
இல்லை. இன்று அரசியல் சட்டத்தின் 324ஆவது பிரிவின் கீழ் தேர்தல் ஆணையத்தின் எஞ்சிய
அதிகாரத்திற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2002ஆம்
ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் ஆணையின் படி, சட்டபூர்வ அங்கீகாரம் பெற்றுள்ளது.
அடிப்படையில் முன்மாதிரியான நடத்தை விதிகளை அரசு வசதியற்றதாகக் கருதும் போதும்
இந்திய தேர்தல்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெற்று ஒரு நிலையான களத்தை
வழங்குகின்றன. இத்தைய அமைப்புகளை வெளிநாட்டு மண்ணில் ஒரு மூத்த அமைச்சர் விமர்சனம்
செய்வது சாதாரணமானது அல்ல. இந்த நிறுவனங்கள் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்த
பங்களிக்கின்றன.
இரண்டாவது கவலையளிக்கும் கருத்து அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இருந்து வந்துள்ளது. ஊடகங்களை
நரேந்திர மோதி நிர்வகிக்கிறார் என்றும் மோதி அலையை ஏற்படுத்துவதாகவும்
கூறியுள்ளார். இதற்காக
ஊடகங்கள் விலை கொடுக்க வேண்டி வரும் என்று கூறியுள்ள அவர், மத்தியில் அரவிந்த்
கெஜ்ரிவால் ஆட்சிக்கு வந்தால் இதற்கு பொறுப்பான பத்திரிகையாளர்கள் சிறையில்
தள்ளப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்களால் தற்போது அவர்
மறுப்பு முறைக்குச் சென்றுள்ளதைப் பார்த்து மக்கள் கவலையடைந்துள்ளார்கள்.
அரவிந்த் கெஜ்ரிவால் முதலில் ஜனரஞ்சகவாதியாகத் தொடங்கினார். ஒரு வாய்ச்சவடால்
அரசியல்வாதியாக உருவாகியுள்ளார். யார் மீதும், எவர் மீது எந்த ஆதாரமும் இல்லாமல்
அவரால் குற்றஞ்சாட்ட முடியும். உணையில் சிறிதளவே அக்கறை கொண்டுள்ளார். பொய்களைத்
திரும்ப, திரும்ப சொல்வதில் நம்பிக்கை கொண்டுள்ளார். அவரால் உருவாக்கப்பட்டவை
உண்மைதான் என்று அவராகவே சமாதானம் செய்து கொள்கிறார். ஜனரஞ்சகவாதியாக பல்வேறு
பகுதிகளில் அவருக்கு கொள்கைகள் இல்லை. ஒரு வழக்கை சொல்வதற்கு முன் குழப்ப
மனநிலையில் காணப்படுகிறார். இது போன்ற நபர்கள் ஜனநாயக அமைப்புகளுக்கு மிகுந்த
சாதங்களை ஏற்படுத்துபவர்களாகவே இருப்பார்கள். ’நேர்மையற்றதை ஊடகங்கள் கற்பிக்க
வேண்டும். மோடிக்கு தேர்தல் சாதகம் உள்ளது என்று கூறுவது நேர்மையற்றத் தன்மைக்கு
ஆதாரம்” என்பதுதான் அவர் வலியுறுத்தும் கொள்கை. காமிரா முன்பு சொன்னதை சொல்லவே
இல்லை என்று நேரடியாக அவரால் மறுக்கவும் முடியும்.
நீதித்துறை, சுதந்திர ஊடகம், தேர்தல் ஆணையம் ஆகிய ஜனநாயக அமைப்புகள் மீது
சல்மான் குர்ஷித்தும் ஏன் கோபம் கொள்கிறார்கள். அவர்களது விமர்சனம்
முதிர்ச்சியடைந்த அரசியலின் குறியீடு அல்ல. தேர்தல் வெற்றிகளும் தோல்விகளும்
தேர்தல் நடைமுறையில் ஒரு பகுதி. இந்தியாவும் அதன் ஜனநாயகமும் நிலையானவை. மனிதர்கள்
அல்ல. ஒரு தேர்தல் தோல்வியால் சினம் கொண்டு, சல்மான் குர்ஷித்தும் அரவிந்த்
ஜெஜ்ரிவாலும் ஜனநாயக அமைப்புகளை மீறுவது ஏற்புடையதல்ல.
No comments:
Post a Comment