
அருண்
ஜெட்லி
(எதிர்க்கட்சித் தலைவர்,
மாநிலங்களவை)
மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், மக்களவைத் தேர்தலில்
போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து ஒரு இடத்தில்
கூட வெற்றி பெற முடியாதவாறு, காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ள போது, இது
விவேகமான முடிவாகும்.
பாரம்பரியமாக,
தமிழ்நாட்டின் அரசியலானது அ.இ.அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைமையிலான அணிகளுக்கு டையில்
நடைபெறும். இரண்டு அணிகளில் ஏதாவது ஒன்றில் இணைவதன் மூலம் மேலெழுந்தவாரியாக ஆதரவை
அதிகரித்துக்கொள்ள முடியும். இன்று, இரண்டு கட்சிகளும் காங்கிரசை விட்டு விலகி
சென்றுவிட்டன. மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீது.
அ.இ.அ.தி.மு.க. கடும் அதிருப்தியுடன் உள்ளது. தி.மு.க.வோ ஐ.மு.கூ. ஏமாற்றி விட்டதாக உணருகிறது.
இரண்டு கட்சிகளும் தேர்தலுக்குப் பிறகு அவர்களது தேர்வை
மேற்கொள்ளவுள்ளன.
2004இலும், 2009இலும் ஐ.மு.கூ. எண்ணிக்கையை தமிழ்நாடும், ஆந்திர பிரதேசமும்
கணிசமாக உயர்த்தின. இந்த இரண்டு மாநிலங்களிலும் ஐ.மு.கூ. ஆதரவு சமநிலையில்
இருந்தது. இந்த முறை இந்த இரண்டு மாநிலங்களிலும் ஐ.மு.கூ. படுதோல்வியைச்
சந்திக்கும்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க. வலிமை பெற்றுள்ளது. இந்த முறை இதன்
ஆதரவு தளம் இந்த நேரத்தில் விரிவடைந்துள்ளது. பா.ஜ.க.வுக்கு வலிமை அதிகரிப்பதற்கு
மோதி அலை ஒரு காரணம். மாநிலம் முழுவதும் இதற்கு வாக்கு இரட்டை இலக்கத்தில் வாக்கு
இருப்பதாக்க் கணிக்கப்படுகிறது. தே.மு.தி.க, பா.ம.க. ம.தி.மு.க. மற்றும் இரண்டு
சிறிய மாநிலக் கட்சிகள் அடங்கிய ஒரு கூட்டணியை பா.ஜ.க. அமைத்துள்ளது.
இந்த இணைப்பிற்கு இருமுனை போட்டியை மும்முனை போட்டியாக
மாற்றும் வலிமை உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு சதவீதம் மிக முக்கியமாக
இருக்கப் போகிறது என்பது மட்டுமல்ல, ‘மோடி தலைமையிலான கூட்டணி’ என்பதே இதன் வலிமை
அதிகரிப்பதற்கு காரணம் என்பது உண்மை. இந்தக் கூட்டணி இடங்களைப் பிடிப்பதற்கான
சாத்தியக்கூறு அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் மும்முனை யுத்தம்
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது.
1996இல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மூன்று கட்சிகளே இருந்தன. இரண்டு
ஆண்டுகளுக்குள் அடல்ஜி அதை 24 கட்சிகள் கொண்ட கூட்டணியாக மாற்றினார். தே.ஜ.கூ.
அந்த திசையில் செல்கிறதா? சீமாந்திராவிலும், தெலுங்கானாவிலும் கூட்டணி
பேச்சுவார்த்தைகளில் சில நேர்மறையான விளைவுகள் ஏண்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
இவை மட்டும் நடந்தால், பா.ஜ.க.வுக்குக் கூட்டணி இல்லாத மாநிலங்களாக கேரளா, ஒடிசா,
மேற்கு வங்காளம் ஆகியவை மட்டுமே இருக்கும். வடக்கு வங்காளத்தில் கூர்க்காலாந்து ஜன
முக்தி மோர்ச்சாவின் ஆதரவுடன் சில இடங்களை வெல்வதற்கான சாத்தியக்கூறு உள்ளது. ஒடிசாவிலும்,
கேரளாவிலும் வாக்கு எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலமாக கட்சியின் வலிமை
அதிகரிக்கும். இன்று
தேசிய ஜனநாயகக் கூட்டணியானது இந்தியக் கூட்டாட்சி முறையின் உண்மையான வடிவமாக
உள்ளது.
No comments:
Post a Comment