Sunday, 13 April 2014

வலுவான உள்நாட்டு பாதுகாப்புக்கு ஒரு சுதந்திரமான, நேர்மையான தேர்தல் அவசியம்

                                                                                                                           2014 மார்ச் 24
                           
                                                                          அருண் ஜேட்லி
                                   (எதிர்க்கட்சி தலைவர், மாநிலங்களவை)
                                                                                      
                                                                                   





தேர்தல்களின்போது, மூத்த தலைவர்களைத் தாக்கத் திட்டமிட்டிருந்த பாகிஸ்தான் காரனான, உயர்மட்ட இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவன், நேற்று ராஜஸ்தானில் இந்திய பாதுகாப்பு அமைப்புகளால் கைது செய்யப்பட்டான். இந்தக் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைத்து பாதுகாப்பு அமைப்புகளுக்கும் என்னுடைய பாராட்டுகள். இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து அனைவருக்குமே குறிப்பாக, பா.ஜ.க.வைச் சேர்ந்த எங்களுக்கு ஆழ்ந்த கவலை உண்டு. இந்தியா தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ள முடியாது.


எல்லை முழுவதிலும் நாட்டின் உள்ளிருந்தும் வெளியே இருந்தும் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகளிடமிருந்தும் பல்வேறு உள்ளூர் அமைப்புகளிடமிருந்தும்  அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகிறது. வன்முறை மூலம் இந்திய நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பைத் தகர்தெறியும் நம்பிக்கையுடன் செயல்பட்டுவரும் பல்வேறு மாவோயிஸ்ட் அமைப்புகளிடமிருந்தும் அச்சுறுத்தல்கள் வந்தவண்ணம் உள்ளன. சமீப ஆண்டுகளில் நடைபெற்ற பல பயங்கரவாத வன்முறைத் தாக்குதல்கள் இந்த குழுக்களின் பக்கபலத்தோடுதான் நடைபெற்றன என்று சந்தேகிக்கப்படுகிறது. பாதுகாப்பு அமைப்புகள் இந்தக் குழுக்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க இரவு பகல் பாராமல் கடுமையாகப் பாடுபட்டு வரும் இந்த நேரத்தில், உள்துறை அமைச்சகம், தேர்தல் பிரச்சாரங்களின்போது எந்த அரசியல் தலைவர்கள், குறிப்பாக பா.ஜ.க. தலைவர்களின் தாக்கப்படும் அச்சுறுத்தல் குறித்த எந்த தகவலும் இல்லை என்று சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது மிகவும் ஆச்சரியமான விஷயம். பொதுத் தேர்தல்களில் இடையூறுகள் ஏற்படுத்த பயங்கரவாதிகள் நிச்சயம் முயற்சி மேற்கொள்வார்கள். இந்த முனைப்புகளை ஒரே ஒருமுறைகூட வெற்றிபெற அனுமதிக்க முடியாது. நேற்று போலவே நமது பாதுகாப்பு அமைப்புகள் மும்முரமாக முனைந்து பயங்கரவாதிகளைக் கண்காணித்து, அவர்களின் திட்டங்களை முன்கூட்டியே கண்டறிந்து முறியடிக்க வேண்டும். ___________________________________________
“மனிதநேயம்” (“இன்சானியாத் ") மூலம் பாஜக ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும்"


 

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை விட தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஜம்மு & காஷ்மீர் பிரச்சினைகளில் மிகவும் நேர்மையாக செயல்பட்டது என்று பேசிவரும் அறிக்கைகளை கடந்த சில நாட்களாக நான் படித்து வருகிறேன்.  இந்த அரசியல் குழுக்களில் பெரும்பாலானவை சித்தாந்த ரீதியாக பா.ஜ.க.வின் எதிர்ப்பு அணியில் உள்ளவை. பிறகு இவர்கள் ஏன் பா.ஜ.க. வின் நேர்மை குறித்தும் ஜம்மு & காஷ்மீர் பிரச்சினைகளில் நேர்மையாக நடந்துகொண்டதாக ஏன் கூற வேண்டும்?

 

ஜம்மு & காஷ்மீரும் பாஜக சித்தாந்தமும் ஒருங்கிணைந்தவை. ஒரு தேசியவாத அமைப்பான நாம் எல்லை தொடர்பான விஷயங்களில் எந்தவிதத்திலும் சமரசத்திற்கு இடமளிக்கவே முடியாது. இது குறித்த நமது கருத்துகளை அனைவரும் நன்கு அறிவர். இந்தப் பிரச்சினையின் வெளி பரிமாணங்களைப் பொருத்தவரை, இந்திய எல்லைகளைக் குறித்து எந்த விதமான பேரங்களுக்கோ அல்லது சமரசத்திற்கோ அனுமதிக்கவே முடியாது. உள்நாட்டு அளவிலான பரிமாணங்களைப் பொருத்தவரை, ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் அறிவித்த “இன்சானியத்” அணுகுமுறையின் வழிநடத்துதல்களின்படி இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.  இந்த மாநிலத்தில் நான் நிறைய முறை சென்றிருக்கிறேன். இங்கு ஜம்மு லே மற்றம் லடாக் மக்களிடையே வேறுபாட்டு உணர்வு நிலவுவதை உணர்ந்துள்ளேன். இது நிச்சயம் தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. இந்தப் பள்ளத்தாக்கிற்குள் நாங்கள் பிரிவினைவாதிகளுக்கு எந்த வகையிலும் சலுகைகள் அளிக்கப்பட மாட்டாது மற்றும் சராசரி காஷ்மீர் மக்கள் மீது அக்கறை மற்றும் பரிவு காட்டப்பட வேண்டும் என்கிற இரட்டை அணுகுமுறையோடு இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும். சராசரி மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட வேண்டும். அவர்கள் எந்தெந்த விஷயங்களில் தொல்லைக்குள்ளாகி வருகிறார்களோ அந்த விஷயங்கள் சரிசெய்யப்பட வேண்டும். பிரிவினைவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கு நமது முக்கிய கூட்டாளியாக இருக்க வேண்டும். அந்நியப்படுத்தப்படுவது தொடர்பான பிரச்சினைகள் நமது அடிப்படை சித்தாந்தங்களில் எந்த விதமான சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் தீர்க்கப்பட வேண்டும்.
_______________________________________

“பா.ஜ.க.  தனது இறுதிகட்ட முனைப்பில் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும்.”

தேர்தலில் போட்டியிடப்போகும் பெரும்பாலான நமது வேட்பாளர்களை அறிவித்ததுடன் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி கட்டத்தில் நாம் நுழைந்துள்ளோம். இந்தக் களத்தல் பா.ஜ.க.வும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும் முன்னணியில் உள்ளன என்பது தெளிவாகிவிட்ட விஷயம். இந்த நிலவரத்தை நாம் தக்கவைத்துக்கொள்வது மட்டுமல்லாமல், அதை மேம்படுத்தவும் வேண்டும். முன்னணி வீரர்களின் கடைசி நேர செயல்பாடுகள் எப்போதுமே அபாராமாக இருக்க வேண்டும். நமக்கு ஆதரவாக பல விஷயங்கள் மாறியுள்ளன என்பதை நமது கட்சி, அதன் தொண்டர்கள், அதன் ஆதரவாளர்கள் அனைவரும் நினைவில்கொள்ள வேண்டும். இந்தத் தருணத்தில் நாம் எந்தவித தவறுகளுக்கும் இடம் தந்துவிடக் கூடாது. களத்தில், பா.ஜ.க.வும் நரேந்திரமோடியும் தற்போது மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளனர் என்பதால், நமது தவறுகள் மிகவும் பூதாகரமாக வெளிப்படுத்தப்படும். நேற்று கர்நாடகத்தில் நடைபெற்ற விஷயம் நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்றுதான். பா.ஜ.க.வின் உட்கட்சி ஜனநாயகம் ஆரோக்கியமானதாக இருப்பதால், நமது பெரும்பாலான தலைவர்களும் நமது ஆதரவாளர்களும் ஒரே மாதிரியாக குரலெழுப்பினார்கள். இதனால், அந்தத் தவறு உடனடியாக சரிசெய்யப்பட்டுவிட்டது.   


 
 




No comments:

Post a Comment