பாரதீய ஜனதா
கட்சி
(மத்திய
அலுவலகம்)
11, அசோக் சாலை, புது தில்லி – 110001
தொலை பேசி : 23005700; தொலை நகல்: 23005787
நாள்: மார்ச் 25, 2014
___________________________________________________________________________________
“சவுகந்த், நம் கனவு
இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதிமொழியை வெளிப்படுத்துகிறது”, என்று ஜெட்லி கூறினார்.
2014 பொது
தேர்தலுக்கான பிரச்சார கீதம் திரு அருண் ஜெட்லி அவர்களால் இன்று
தொடங்கிவைக்கப்பட்டது. பிரச்சார கீதப் பாடல் அடங்கிய குறுந்தகடு பாஜக 11, அசோக்
சாலை, புதுதில்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. பாடல் எண்ணம்
மற்றும் உருவாக்கம் திரு ப்ரசூன் ஜோஷியின் அணியினால் வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கு
இசையமைத்திருப்பது திரு ஆதேஷ் ஸ்ரீவஸ்தவா. திரு சுக்விந்தர் சிங் இந்தப்
பாடலுக்குக் குரல் கொடுத்திருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில்
பாஜக தலைவர்களான, திரு ரவி சங்கர் பிரசாத், திரு ஜகத் பிரகாஷ் நடா மற்றும் திருமதி
நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த கீதத்திற்கு ”சவுகந்த்” என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. –
நாட்டிற்கான உறுதிமொழி. இது நம் நாட்டில் நிலவும் ஏக்க மனநிலையைப் பற்றி
பேசுகிறது மேலும் நம் நாட்டினை வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்வதற்கான கூட்டு
உறுதிமொழியையும் வெளிப்படுத்துகிறது. இந்தப் பாடலில் நம் பிரதமர் வேட்பாளரான திரு
நரேந்திர மோடியின் இந்தியா உயர் நிலைக்குச் சென்று பெருமிதத்துடன் நிற்பதற்கான தீர்மானங்களின்
உறுதியையும் வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் இந்தியாவின் பிரகாசமான
எதிர்காலத்திற்கான பாதையில் உருவாகியுள்ள சமீபத்திய தடைகளை நாம் அனுமதிக்க கூடாது
என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். அனைத்து இந்தியர்களும் இந்தச் சேவைக்கான
உறுதிமொழியில் எங்களோடு கைகோர்ப்பார்கள் என்று நம்புகிறோம்.
“சவுகந்த்”
முழக்கம் வானொலி, தொலைக்காட்சி, ஊடகம் என அனைத்திற்கும் ஏற்ப அமைந்துள்ளது. “சவுகந்த்”
பாஜக பிரச்சாரக் கூட்டங்களில், பொதுக் கூட்டங்களின் தொடக்கத்தில் நாளை
தொடங்கும் பாரத் விஜய் பிரச்சாரத்திலிருந்து ஒலிபரப்பப்படும்.
(பொறியாளர். அருண் குமார் ஜெயின்)
அலுவலக செயலர்
No comments:
Post a Comment