Sunday, 13 April 2014

ஜோசப் கோயபல்ஸின் மறுபிறப்பு


06 மார்ச், 2014

அருண் ஜெட்லி

(எதிர்க்கட்சித் தலைவர், மாநிலங்களவை)


 
 
1933 முதல் 1945 வரையிலான ஹிட்லரின் மூன்றாவது ஆட்சியில் ‘பொது அறிவு மற்றும் பிரச்சாரத் துறை’ அமைச்சராக இருந்தவர் ஜோசப் கோயபல்ஸ். தொலைதொடர்பு, ஊடகம்-வானொலி, பதிப்புத்துறை, திரைப்படம் மற்றும் இதர கலைகளுக்கான முழு கட்டுப்பாட்டை அந்தப் பதவி அவருக்கு கொடுத்திருந்தது.  வரலாற்றில் நினைக்கப்படும் அவரது பிரபலமான யுத்திக்கு அவரது வாசகம் ஆதாரமாக உள்ளது.


               “நீங்கள் ஒரு பொய்யைத் திரும்ப, திரும்ப கூறினால் உண்மையாகி விடும். இறுதியில் மக்கள் அதை நம்பி விடுவார்கள். பொய்யின் அரசியல், பொருளாதார மற்றும் ராணுவ விளைவுகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் வரை தான், அந்தப் பொய்யைப் பராமரிக்க முடியும். எனவே இது அரசுக்கு மிக இன்றியமையாததாக மாறும் போது, அதன் அனைத்து அதிகாரங்களையும் எதிர்ப்பை ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தும். பொய்யின் தார்மீக எதிரியாக உண்மை இருக்கும். அது விரிவடையும் போது, உண்மையானது அரசின் மிகப்பெரிய எதிரியாக இருக்கும்.”

               நேற்று நடந்தது புதிரானது அல்ல. இந்தியாவின் மாற்று அரசியலின் ஒரு சாதாரண யுத்தியின் குரல் இது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படவோ அல்லது காவலில் வைக்கப்படவோ இல்லை. நடத்தை விதிகளை செயல்படுத்தும் போது, காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் தேர்தெடுக்கப்பட்ட மாநில அரசிடம் நடத்தை விதிகளை அமலாக்குவது குறித்து சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றினார்கள். நம்மில் எல்லோரையும் பல்வேறு தேர்தல்களில் நிறுத்தி சோதனையிட்டுள்ளார்கள். நம்முடைய தனிப்பட்ட உடமைகள் கூட அவற்றுள் பணம் கொண்டு செல்லப்படுகிறதா, இல்லையா என்பதை அறிய சோதனை செய்யப்படுகிறது. சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளில் ஒரு பகுதியாக நாம் இவற்றை எப்போதும் ஏற்கிறோம். ஆனால் கெஜ்ரிவால் அவரைக் காவலில் வைக்காததை தேசிய பிரச்சினையாக மாற்றுகிறார்.              

குறுந்தகவல்கள் மூலமாக குறிப்பிட்ட இடங்களில் தொண்டர் படையைத் திரட்டி, ஒரு காட்சியை உருவாக்குவதுதான் ஆம் ஆத்மி கட்சியின் வழக்கமான யுத்தி. அதை அவர்கல் ரயில் பவனின் வெளியேயும், எனது வீட்டு வெளியேயும் செய்துள்ளார்கள். இந்த முறை எனது கட்சி அலுவலகத்தில் செய்துள்ளார்கள். இது போன்ற ஆர்ப்பாட்டங்களை நாடெங்கிலும் உள்ள பா.ஜ.க. அலுவலகம் முன்பு நடத்தியுள்ளார்கள். அலுவலகம் மீது கற்கள் வீசப்பட்டன. விளம்பர பாதகைகள் சேதமுற்றன. ஒரு முக்கியமான உறுப்பினர் சுவர் ஏறி குதித்து, வளாகத்தில் அத்துமீற முயன்றார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர், பா.ஜ.க. தொண்டர்களைத் தூண்டிவிட்டு, மோதல்களில் ஈடுபட்ட பிறகு, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் தொலைகாட்சி நிலையங்களுக்கு அணிவகுத்தார்கள். பாதிக்கப்பட்ட அப்பாவிகளைப் போன்று பாசாங்கு செய்தார்கள். அமைதியாக நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தை உள்ளிருந்து தாக்கியதாக அவர்கள் கூறினார்கள். நடத்தை விதிமுறைகள் கீழ் மேற்கொள்ளப்படும் வழக்கமான சோதனையை ஒரு உறுப்பினர் சௌரி – சௌராவின் வரலாற்று முன்னேற்றங்களாக வர்ணித்தார்.

               துர்திருஷ்டவசமாக, ராஜ்மோகன் காந்தியைப் போன்றவர்கள் கூட தங்களை இந்த பொய் பிரச்சாரத்தின் கருவிகளாக ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சியின் கடுமையான ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். உண்மையில் பாதிப்புகள் வன்முறையாகி விட்டன. சட்ட மீறல் மற்றும் வன்முறைக்காக அதன் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டப் போது, பாதிக்கப்பட்டவர்களும் கைது செய்யப்பட வேண்டும் என்று அதே இடத்தில் குரல் எழுப்பினார்கள்.              

கடந்த சில நாட்களாக எனது அனுபவம் என்னவென்றால், உண்மையாகவோ அல்லது கற்பனையாகவோ ஒரு பிரச்சினையை உருவாக்கி, அதைத் தொடரும் பிரச்சார யுத்தியை ஆம் ஆத்மி கட்சி பயன்படுத்துகிறது. டெல்லியில் அதன் அபாயகரமான 49 நாள் செயல்திறனில் இருந்து பாதுகாக்க முடியாமல், ஒரு முக்கியமான  பெருநிறுவனத்தின் பிரச்சினையை அரசியல் பிரச்சினையாகக் கண்டுபிடித்தார்கள். அதன் அனைத்து எதிர்ப்பாளர்களும் பெருநிறுவனத்திற்கு நெருக்கமானவர்கள். அவர்கள் வாதிடுவதற்கு சந்தேகத்திற்கு உரிய வகையில் நிதி பெறுபவர்கள் அல்ல. அவர்களது சொந்த நிதி கண்ணியமானது. இவை அனைத்தையும் நிரூபிக்க அவர்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது. ஒன்றுமில்லை. எனது வீட்டிற்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மதன்லால் என்ற எம்.எல்.ஏ.வுக்கு கையூட்டு அளித்ததாக ஒருவர் குரலெழுப்பினார். ஆர்ப்பாட்டம் நடக்கும் வரை டெல்லியில் மதன்லால் என்ற எம்.எல்.ஏ. இருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. நேற்று நாடு முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டங்கள் தற்போது அமைதியான நடவடிக்கைகளாக நியாயப்படுத்தப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள்தான் உண்மையான குற்றவாளிகள் என்று அவர்கள் உரத்தக் குரலில் கூச்சலிடுகிறார்கள்.

ஜோசப் கோயபல்ஸ் மறு பிறப்பு எடுத்திருந்தால், அவர் நிச்சயம் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்திருப்பார்.

No comments:

Post a Comment