நாள்: 18 மார்ச், 2014
அருண்
ஜெட்லி
(எதிர்க்கட்சி
தலைவர், மாநிலங்களவை)
2014 பொது தேர்தல் 1971 தேர்தலின்
தலைகீழ் திருப்பமாக அமைகிறதா?
அரவிந்த் கெஜ்ரிவாலும் மற்றும் ஆம் ஆத்மி கட்சியும்
ஊழலுக்கு எதிராய் போராடுகிறோம் என்று வெளிச்சத்திற்கு வந்தவர்கள். இந்த உத்தி
அவர்களை ஊழல் எதிர்ப்பு போராளிகளாக காட்சிப்படுத்திக்கொண்டு மாற்று சக்திகள் என்ற
இடத்தையும் பெற்றன. ஊழல் எதிர்ப்பு என்கிற அடையாளம் அவர்களுக்கு காங்கிரசுக்கு
எதிராக ஆதாயம் தேடித்தந்திருக்கலாம் ஆனால் பாஜகவிற்கு எதிராக எதுவும் கிடைக்காது. கட்சியும் இப்போது தடம் மாறிவிட்டது. கடந்த சில வாரங்களில் ஆம் ஆத்மி கையாண்ட
விவகாரங்களில் உண்மையோ அல்லது கற்பனையோ ஊழல் விவகாரங்களைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.
எந்த நிலையிலும் ஆம் ஆத்மி கட்சி 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் நிலக்கரி
சுரங்க ஒதுக்கீடு ஆகியவற்றின் ஊழல் விவகாரங்களைப்
பற்றிய எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லை. அவர்கள் அன்றாட வாழ்க்கையில்
சந்திக்கும் விற்பனை சம்ப்ந்த ஊழலில் மட்டும்தான் கவனம் செலுத்தினர். மேலும் ஆம்
ஆத்மி கட்சி தன் பார்வையை ஊழலை விடுத்து மோடி எதிர்ப்பின் பக்கம் திருப்பியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் பொருளாதார உண்மை நிலவரத்தைப் பற்றி கூவ ஆரம்பித்திருக்கிறது,
குஜராத் உண்மையில் வளர்ச்சியடையவில்லை என்று அது கூறி வருகிறது. ffமோடிக்கு எதிராக
வாரணாசியில் போட்டியிடுவதற்காக இவர்கள் நடத்தும் இத்தகைய கேளிக்கூத்து நாடகம் ஒரு
பக்கத்தில் மோடி எதிர்ப்புக்கான இடத்தை ஆம் ஆத்மி பெற வேண்டிய நோக்கம் ஓரளவு
நிறைவேறியிருக்கிறது.
காங்கிரசும் ராகுல் காந்தியும் தேர்தல் வியூகங்களை
அமைப்பதில் ரொம்பவே திணறுகிறார்கள். விளம்பரக் கோஷங்களும் வெறும் வாய்ச்சொற் கோட்பாடுகளும்
எந்தவிதத்திலும் அரசியல் ரீதியான புரிதல் தர்க்கத்திற்கு எளிதில் மாறிவிடாது. ஆதரவுகளைத்
திரட்டுவதில் தோற்றுப் போனதால், அவர்களும் 2002 குஜராத் கலவரத்தைக்
கருப்பொருளாகக்கொண்ட மோடி எதிர்ப்பு முழக்கத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். 2002
கலவரங்கள் குஜராத் காவல்துறையால் விசாரணை
செய்யப்பட்டிருக்கிறது, இறுதியில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு
அதிகாரிகளும் விசாரித்திருக்கிறார்கள். சிறப்பு புலனாய்வு அதிகாரிகளின் அறிக்கையின்
மீது ஒரு நீதிமன்ற ஆலோசகரும் அவரது கருத்தைத் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம்
அந்த விசாரணையை கண்கானித்தது. இறுதியில், நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவின்
அறிக்கையை ஏற்றுக்கொண்டது. இப்போது நம்மிடையே இருக்கும் ராகுல் காந்தி, முறையான
எந்த சட்ட அறிவும் இல்லாதவர் இந்த வழக்கு சரியான விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை
என்று கருத்து தெரிவிக்கிறார். இப்படி அவர் கூறுவதற்கான நோக்கம் என்ன?
அவர்களது அனைத்து அரசியல் உத்திகளும் தோல்வியடைந்த நிலையில்
அவர்களுக்கு இருக்கும் ஒரே மாற்று உத்தி மோடி எதிர்ப்பு நிலைதான்.
அதே நேரத்தில் நரேந்திர மோடி இந்த இரண்டு கனவான்களையும்
மோடி எதிர்ப்பு இடத்திற்காகப் போட்டியிட்டுக்கொள்வதற்கு அனுமதிக்கிறார். அவர் கிட்டதட்ட
மாபெரும் கூட்டத்தில் பிரச்சாரங்களை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து மேற்கொண்டு
வருகிறார். இந்தியாவும் அதன் வளர்ச்சியும்தான் அவருடைய முதன்மையான நோக்கமாக
தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
No comments:
Post a Comment