Sunday, 13 April 2014

காங்கிரசுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே தங்களையே தோற்கடிக்கும் உறவு

தேதி:மார்ச்09, 2014
 

அருண் ஜெட்லி

எதிர்க்கட்சித் தலைவர் (மாநிலங்களவை)
 
 
 
2013 டிசம்பர் மாதம் டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சியும், பா...வும் ஒரு வசதியான உறவு முறையை மேற்கொண்டன. ஆம் ஆத்மி கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. அதன் மாநில தலைவர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட விரும்பினாலும் வேலைநிறுத்தம் செய்ய விரும்பவில்லை. ஷீலா தீக்ஷித் மற்றும் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் மீது எஃப்..ஆர். பதிவு செய்ய காங்கிரஸ் விரும்பியது. சட்ட அங்கீகாரம் இல்லாத காவல்துறை அமைப்பு எஃப்..ஆர். பதிவு செய்தது. பா... எதிர்ப்பு அறிவுஜீவிகள் பிரிவின் ஆதரவை காங்கிரஸ் பெற்றுக்கொண்டது. திரு. நரேந்திர மோதிக்கு சவால் விடும் சாத்தியமுள்ள போட்டியாளராக ஆம் ஆத்மி கட்சி மீது இந்தப் பிரிவு நம்பிக்கை வைத்தது.

கடந்த சில வாரங்களாக, தேசிய அளவில் ஆம் ஆத்மி கட்சி பிரச்சாரத்தைத் துவக்கியுள்ளது. ஒட்டுமொத்த கவனமும் காங்கிரஸ் மற்றும் திரு நரேந்திர மோதிக்கு எதிராக உள்ளது. இதன் தலைவர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால், “ஊழலை விட மதவாதம் மோசமானதுஎன்று பிரகடனம் செய்துள்ளார். காங்கிரசுக்கு இவர் முன்னுரிமை அளிப்பதும் பா...வுக்கு விரோதமாகச் செயல்படுவதும் தெளிவாக அடையாளம் காணப்பட்டது. இவரது உரைகளில் டெல்லியோ, குஜராத்தோ அல்லது உத்தர பிரதேசமோ நரேந்திர மோதியை எப்படி தடுத்து நிறுத்துவது என்ற உந்துதல் ஒட்டுமொத்தமாக வெளிப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சியோ அதன் தலைமையோ பரம்பரை குறித்து எதுவும் பேசவில்லை. தேசிய பாதுகாப்பில் மத்திய அரசு பலவீனமாக உள்ளது குறித்து பேசவில்லை; காங்கிரசின் கீழ் தேசிய பொருளாதாரம் எவ்வாறு பாதிப்படைகிறது என்பது குறித்து புள்ளிவிவரங்களைத் தரவில்லை. நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து எந்த விமர்சனமும் இல்லை. காங்கிரசின் கூட்டாளியான தண்டிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ் பற்றி கூட விமர்சனம் செய்யவில்லை. ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் மீது மென்மையாகவும், பா.ஜ.க. மீது கடுமையாகவும் நடந்து கொள்கிறது. இது காங்கிரஸ் – ஆம் ஆத்மி யுத்தியாகும்.
இதற்கிடையில் காங்கிரஸ் வெற்று பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இதன் தலைமை ஒளி மங்கியுள்ளது. இதன் பிரச்சாரம் பின்னோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. ஊடக விவாதங்களில் பா.ஜ.க.வுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே உள்ள அரசியல் போராட்டமே ஒட்டுமொத்த கவனமாக உள்ளது..வெளிப்படையாக, காங்கிரசுக்கு ஆம் ஆத்மி கட்சியை விட மிகப் பெரிய வாக்கு வங்கி உள்ளது. ஆம் ஆத்மி கட்சி அதன்  இருப்பை உணர்வதற்காக மட்டுமே போராடிக்கொண்டிருக்கிறது. இது அதிகபட்ச ஊடக விளம்பரத்தை இலக்கு வைத்து தந்திரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஊடகத்தின் இதன் இருப்பு காங்கிரசை விட அதிகமாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட பிரிவுக்கு மத்தியில் காங்கிரசை விட இதுவே அதிகமான ஊடக வெளியில் இடம்பிடித்துள்ளது.
இருந்த போதிலும் காங்கிரஸ் என்ன செய்யத் தவறியதோ, அதை ஆம் ஆத்மி கட்சி செய்துவிட்டது என்று காங்கிரஸ் உணர்ந்திருக்கலாம். ஒரு சுய குறிக்கோளை அடைந்த்துடன் அது முடிந்துவிட்டது. பா.ஜ.க. வசதியாக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் அல்லாத இடத்தை இது நிரப்பியுள்ளது. காங்கிரஸ் அல்லாத குழுக்கள் அதிக அளவில் பா.ஜ.க.வில் இணைகின்றன. ஊடகம் மற்றும் வாக்கு இடத்தில் ஆம் ஆத்மி கட்சி என்ன லாபம் ஈட்டினாலும், அது பா.ஜ.க. அல்லாத இடத்திற்குச் சென்று விடும்.  பா.ஜ.க. அல்லாத இடத்திற்கு ஏராளமான போட்டிகள் உள்ளன. இந்த இடத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் இந்த இடத்தில் முதன்மை போட்டியாளர்களாக உள்ளனர். பா.ஜ.க. அல்லாத இடத்தை அடைய ஆம் ஆத்மி கட்சி முயற்சிக்குமானால், அது மற்ற பா.ஜ.க. அல்லாத அதிகமாகப் பாதிக்கும். ஆம் ஆத்மி கட்சியை காங்கிரஸ் கட்சி ஊக்குவித்த்து. ஆனால் இன்று அது காங்கிரசின் காலடியில் நசுங்கியுள்ளது. பா.ஜ.க.வின் அரசியல் களம் விரிவடைந்து வருகிறது. காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சியும் சொகுசான உறவை வைத்துள்ளன. ஆனால் பா.ஜ.க. அல்லாத இடத்தைப் பிளவுப்படுத்துவதன் மூலம், அது ஒரு சுய தோல்வி உறவாக வளர்ந்துள்ளது.
 

No comments:

Post a Comment