தேதி : மார்ச் 8, 2014
அருண்
ஜேட்லி
மாநிலங்களவை
எதிர்கட்சித் தலைவர்
இது
தேர்தல் நேரம், இப்போது உண்மையான பிரச்சாரத்தில் முழுமூச்சுடன் இறங்குகிறோம். எல்லா
அரசியல் கட்சிகளும் தங்களுடைய பிரச்சார உத்திகள், கூட்டணிகளை உருவாக்கிக் கொள்வது,
வேட்பாளர்களை அறிவிப்பது மற்றும் தேர்தல் யுத்திகளை இறுதி செய்வது போன்றவற்றைத் திட்டமிடுவதில்
மிகவும் பிசியாக உள்ளன. நிதி ஆதாரங்களைத் திரட்டுவது மற்றும் பத்திரிகைகள், மின்னணு
மற்றும் சமூக ஊடகங்களுக்கான பிரச்சார திட்டங்களை வழங்குவதிலும் ஆற்றல்கள் செலவழிக்கப்பட்டு
வருகின்றன. தேர்தல்கள் நடைபெறும் சமயங்களில் மிகப் பெரிய அளவிலான நல்லவர்கள் மக்கள்
அரசியலுக்கு வருகிறார்கள்.
இது ஒரு நல்ல அறிகுறிதான். நாட்டு முன்னேற்றத்திற்கு தங்களது
பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற உணர்வால் ஊக்கம் பெறுகின்றனர். திரைப்பட நடிகர்கள்,
விளையாட்டு வீரர்கள், சாதனையாளர்கள் ஆகியோருக்குப் பல அரசியல் கட்சியினரிடமிருந்து
தங்கள் கட்சியில் இணையுமாறு அழைப்பு வந்த உண்ணம் உள்ளது, இவர்களில் சிலர் வேட்பாளர்களாகக்கூட
தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கட்சி விட்டு கட்சி மாறும் பலருக்கும்
இதுதான் சரியான தருணம். தேர்தல் சமயத்தில் நடைபெறும் கட்சி விட்டு கட்சி மாறுவது, கட்சித்
தாவல் ஆகிய நிகழ்வுகள் அரசியல் சக்திகளின் தலைகீழ் மாற்றம் என்று
அழைக்கப்படுகிறது.
முரண்பட்டவர்களுக்கு
(mavericks) தேர்தல்களும் மிகப் பெரிய நிகழ்வு. முரண்பட்ட சிந்தனை கொண்ட இவர், சிந்தனையும்
செயலும் தன்னிச்சையானவையாக இருக்கும். இவர்
பொதுவான விதிமுறைகளுக்கு கட்டுப்படுபடாதவர். இவர் சராசரித்தனமானவர்களிடமிருந்து தனித்து
நிற்பவர். இவர் கத்தி கூச்சலிடுவார், சில நேரங்களில் விந்தையாக நடந்துகொள்வார். தன்னை
முன்னிறுத்திக் கொள்வதற்கான அத்தனை தந்திரத்திரமும் இவருக்குத் தெரியும். இவர் அனைவரது கவனத்தையும் கவர்ந்து
பிரபலமடைகிறார். தன் நிலைகளை மாற்றிக்கொள்வதைப் பற்றி அலட்டிக்கொள்வதே இல்லை. பாரம்பர்ய
அரசியல் தலைவர்களைவிட மின்னணு ஊடகங்களால் போற்றப்படுவார். இந்த முரண்பட்டவர்களின் கருத்துகளுக்கு சமூக ஊடகங்களில், குறிப்பாக ட்விட்டரில் மிகப் பெரிய
இடம் வழங்கப்படுகிறது. இந்த முரண்பட்டவர்களில் பலர் ‘ஏதாவது காரணத்தை இரவல் வாங்கி’
அதை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பது என்ற கொள்கையைப் பின்பற்றுபவர்கள். தங்களால்
ஏற்றுக்கொள்ள முடிந்த கொள்கையைத் தேடிக் கண்டுபிடிப்பார்கள்.
இந்த
‘Mavericks’ என்ற வார்த்தையின் தோற்றம் சாமுவேல் அகஸ்டஸ் மாவெரிக் என்பவரது பெயரிலிருந்து
எடுக்கப்பட்டது. இவர் இவர் 19ஆம் நூற்றாண்டில் தெற்கு கரோலினாவில் வாழ்ந்து வந்த ஒரு
நிலச் சுவாந்தார் மற்றும் மாகாண சபை உறுப்பினர். இவர் முதலில் நிலச் சுவாந்தாராக தன்
வாழ்க்கையைத் தொடங்கி, தனது தந்தையின் வியாபாரத்தை கவனித்து வந்தார், அதன் பிறகு சட்டம்
படித்து வழக்கறிஞராகப் பணியாற்றியவர். டெக்ஸாஸ் மாகாணத்தில் நடைபெற்ற புரட்சியின்போது
இவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இவர் டெக்ஸாசின் மேயராகப் பணிபுரிந்தவர், தேர்தல்களில்
வென்று பல அரசாங்கப் பதவிகளை வகித்தவர். இவரிடம் சிறிய கால்நடைக் கூட்டம் இருந்தது,
இவை சுதந்தரமாக மேய்வதற்கு அனுமதிக்கப்பட்டன, இதனால் ‘சுதந்தரமாகத் திரியும்’ கால்நடைகள்
என்று பொருள் தரும் ‘maverick’ என்ற
வார்த்தைப் பிறந்தது.
இந்தியாவில்
இப்படிப்பட்ட சுதந்தரமாகத் திரியும் முரண்பாடுகள் கொண்ட பலர் உள்ளனர். இப்படி சுதந்தரமாக
சிந்திக்கும் பலர் பல கட்சிகளில் தற்காலிகமாக இணைகிறார்கள், அதற்குப் பிறகு அந்தக்
கட்சிக்கு தாங்கள் பொருத்தமானவர்கள் இல்லை என்பதைக் கண்டறிகிறார்கள். இவர்களில் சிலர்
அரசியல் கட்சிகளையும் தொடங்குகிறார்கள். இவர்களுடைய பாணி வழக்கத்துக்கு மாறானது. அதிகபட்ச
விளம்பரம் தேடித்தரும் ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு விவாதிப்பார்கள். எந்த ஆதாரமும்
இல்லாமல் மற்றவர்கள் மீது குற்றம் சாட்டும் பழக்கம் கொண்டவர்கள் இவர்கள். வழக்கமான
அரசியல்வாதிகள் இவர்களுடன் ஒரு பிரச்சினையில் இணைவதற்குத் தயக்கம் காட்டுவார்கள் ஏனென்றால்,
இவர்கள் எந்தளவு வேண்டுமானாலும் நியாயமற்ற முறையில் நடந்துகொள்ளக்கூடியவர்கள். இவர் ஒரு ஒயில்ட் கார்ட்.
எனக்கு
எப்போதுமே இப்படிப்பட்டவர்களை எப்படிக் கையாள்வது என்பதில் குழப்பம் ஏற்படும். முரண்பட்ட ஒருவர் உங்களிடம் கேட்கும் கேள்விக்கு
உங்களால் பதில் சொல்ல முடியுமா? உங்கள் வீட்டில் கதவை உடைத்துக்கொண்டு வர முயற்சிக்கும்
ஒரு முரண்பட்ட நபரை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? அவரை உங்களுடன் சேர்த்துக்கொண்டு
முக்கிய இடத்தை பிடித்துக்கொள்ள வகை செய்வீர்களா? அல்லது அவரைப் புறக்கணித்துவிட்டு
தொடர்ந்து உங்கள் வழியில் போய் உங்களுக்கான திட்டத்தை வகுத்துக்கொள்வீர்களா? என்னைப்
பொருத்தவரை இதுதான் பாதுகாப்பான விஷயம் என்று கருதுகிறேன். மவுனமே சிறந்தது. இது இந்த
முரண்பட்டவரின் விசித்திரமான செயல் திட்டத்தால் ஏற்படும் தர்மசங்கடத்திலிருந்து உங்களைக்
காப்பாற்றும்.
நல்லவேளையாக
நரேந்திர மோடிக்கு அரவிந்த் கேஜ்ரிவாலை சந்திக்க மறுக்குமாறு மிகச் சரியான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment