நாள்-மார்ச்13, 2014
அருண் ஜெட்லி
(எதிர்க்கட்சித் தலைவர்,
மாநிலங்களவை)
மீண்டும் மவோயிஸ்டுகள் தாக்குதல்
நடத்தியிருக்கிறார்கள். மத்திய ரிசர்வ் காவல் படையைச் சார்ந்த பல காவலர்களும்
சட்டிஸ்கர் காவலர்களும் தங்கள் உயிரை இழந்துள்ளனர். அவர்கள் இந்தியாவைப்
பாதுகாக்கும் பொருட்டில் உயிரைத் தந்து தியாகிகளாகியிருக்கிறார்கள்.
இந்தியா எதிர்கொண்டுவரும் பிரச்னைகளில் மாவோயிஸ்டுகளின்
அச்சுறுத்தல் மிகத் தீவிரமானதாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. மத்திய இந்தியாவின் பழங்குடி மலைவாழ்
மக்களின் பகுதிகளில் பல எண்ணிக்கையிலான மாவட்டங்கள் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம்
மற்றும் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இந்தப் பகுதிகள் மாவோயிஸ்டுகள்
பெரும்பான்மையாக இருப்பவை. இங்குள்ள சராசரி குடிமக்கள் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் மாவட்ட நிர்வாகத்தின் ஆணையும் இங்கு மிகக் குறைவாகவே இயங்குகிறது. இங்கு
மாவோயிஸ்டுகள்தான் வரிகளை சேகரிக்கிறார்கள். அவர்களுக்கு அனைத்து கிராமங்களிலும் ஊதியத்திற்கு
இயங்கும் தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மிகக் கடுமையான ஆயுதங்களைக்
கொண்டிருக்கிறார்கள். மாவோயிஸ்டுகள் தவறாக வழிநடத்தப்பட்ட சிந்தனையாளர்கள் அல்ல. அவர்கள் சமூக
சீர்திருத்தவாதிகளும் அல்ல. மாவோயிஸம் வறுமை ஒழிப்பு திட்டமும் அல்ல. இது இந்திய
பாராளுமன்ற ஜனநாயகத்தைத் தூக்கி எறிந்துவிட்டு அதற்கு பதிலாக ஒரு சித்தாந்த
சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் சித்தாந்த இயக்கம். அதன்படி
மாவோயிஸ்டுகளின் சித்தாந்த திட்டங்களில் ஜனநாயகம் இருக்காது, சுதந்திரம்
இருக்காது, வாழ்க்கை உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம் இருக்காது, சட்டவிதிகள்
ஏதுமிருக்காது, பேச்சு சுதந்திரமும் இருக்காது. இதுவரை உலகம் முழுக்க சித்தாந்த சர்வாதிகாரத்தில்
நாம் பார்த்து வந்தபடி மக்கள் அனைவரும் கொடுங்கோல் ஆட்சிக்கு
உட்படுத்தப்படுவார்கள்.
எப்படி ஒருவர் மாவோயிஸத்தை
எதிர்கொள்ளலாம்? சில கசிந்துருகும் இதயங்கள் முன்வைக்கும் மாவோயிஸ்டு பகுதிகள்
பொருளாத முன்னேற்றத்திற்கான கோட்பாடுகளை நாம் பின்பற்றுவது மட்டும் மாவோயிஸத்தின்
அச்சுறுத்தலை நீக்கி விடுமா? இதில் பாதியளவுகூட உண்மையில்லை. மாவோயிஸ்டுகள்
ஆதிக்கம் இருக்கும் பகுதிகளில் தலையிட்டு அமைதியை நிலைநாட்டும் செயல் எந்த
அரசுக்கும் கடினமான ஒன்று. கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டும். தனியார்
படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுதங்களை முற்றிலும் அழிக்க வேண்டும். சராசரி
குடிமக்களின் வன்முறைகள் முற்றிலும் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறை
ஒப்பந்ததாரர்களும் எப்படியாவது இப்பகுதிகளில் நுழைந்து வளர்ச்சி நடவடிக்கைகளான
பள்ளிக் கட்டிடங்கள், மருத்துவமனைகள், பஞ்சாயத்து பவன்கள் ஆகியவற்றைச் செயல்படுத்த
வேண்டும்.
இப்பகுதிகளில் ஆயுத மற்றும்
வெடிப்பொருட்களுக்கான மூலங்கள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும். மாவோயிஸ்டுகள்
எல்லைகளுக்கு அப்பால் இருந்து கிடைக்கும் அல்லது காவல்துறையிடமிருந்து களவாடப்பட்ட
ஆயுதங்களை நம்பியே இருக்கிறார்கள். மாவோயிஸ்டுகள் தங்கள் எதிரிகளின் ஆயுதங்கள்தான்
தங்களுடைய ஆயுதங்கள் என்று நம்புகிறார்கள். இங்கு எதிரி எனப்படுவது மாநிலம் அல்லது
காவல்துறை.
எவ்வளவு காலம்தான் இந்தியா
வன்முறைகளின் கைகளுக்கு தொடர்ந்து சாதாரண குடிமக்களையும் பாதுகாப்பு வீரர்களையும்
காவு கொடுத்துக்கொண்டிருக்கும்? இவர்கள் இந்தப் பகுதிகளின் வளர்ச்சி திட்டங்களைத் தடுத்துக்கொண்டிருப்பதற்கு
இன்னும் எவ்வளவு காலத்திற்கு நாம் அனுமதிக்கப்போகிறோம்? இனியும் இவர்கள்
மலைவாழ் பழங்குடி மக்களின் நலனுக்காகக் கட்டப்பட்ட கட்டிடங்களையும் ஆஸ்திகளையும்
தகர்க்க நம்மால் அனுமதிக்க முடியுமா?
முதலில் நாம் இயற்கை வளங்கள் மீதான
முதல் உரிமை மலைவாழ் பழங்குடி மக்களுக்குத்தான் என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள
வேண்டும். நாம் மலைவாழ் பழங்குடியினரை மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்திலிருந்து
தனிமைப்படுத்த வேண்டும். மாவோயிஸத்துக்கு எதிரான நம் போராட்டம் எப்போதும்
அரைகுறையாக இருக்கக்கூடாது. ஒட்டுமொத்த இந்தியாவும் அவர்களை எதிர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment