Sunday 13 April 2014

பிஹாருக்கு தனிப்பட்ட வகைமை நிலை


நாள்: மார்ச் 03, 2014
 
 
திரு அருண் ஜெய்ட்லி
எதிர்க்கட்சி தலைவர் (மாநிலங்களவை)
 
 
 
நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள பல மாநிலங்கள் பொருளாதார ரீதியாக மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை. மேலும் இந்த மாநிலங்கல் இயற்கை சார்ந்த பயன்பாடுகள் ஏதும் இன்றியும் பாதிப்படைந்திருக்கின்றன. அவற்றின் வள ஒருங்கிணைப்பும் போதுமான அளவில் இல்லை. அதனால் அந்த மாநிலங்கள் தங்களுக்கு உயர்ந்த வருவாயையும் உதவிகளையும் பெறும் வகையிலான தனிப்பட்ட வகைமை நிலையை தர வேண்டுவது இயல்பானது.


பிஹார் அப்படிப்பட்ட தனிப்பட்ட வகைமை நிலையை விரும்பும் ஒரு மாநிலம்தான். உண்மையான பிஹாரில் ஏற்பட்ட பிரிவினையால் பிஹார் மற்றும் ஜார்கண்டாக பிரிந்ததில் இயற்கை வளங்கள் அனைத்தும் ஜார்கண்ட் பகுதிக்கு மட்டுமே சொந்தமானது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இத்தனை வருடங்களாக பிஹாரில் இந்த தனிப்பட்ட வகைமை நிலையைத்தான் வலியுறுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாது இந்த விவகாரத்தில் பிஹாரின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கிடையேயும் கிட்டதட்ட ஒரு பொது உடன்படிக்கை வந்தது. கடந்த இரண்டு வருடங்களாக காங்கிரஸ் பிஹாருக்கு தனிப்பட்ட வகைமை நிலையைத் தர விருப்பம் தெரிவிக்கும் விதத்தில் ஜே.டி(யு)க்கு ஆலிவ் கிளையை நியமித்தது. 2013இல் பொது பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர், இந்த அரசு ஒரு குழுவை நியமித்து பிஹாருக்கு தனிப்பட்ட வகைமை நிலையைத் தருவது தொடர்பாக சாதகமான முடிவு எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார். இந்த உறுதியளிப்பில் பிஹாரின் பொருளாதார தேவையைக் காட்டிலும் அரசியல் நோக்கம்தான் அதிகம் இருந்தது. பிஹாருக்கு வேண்டிய தனிப்பட்ட வகைமை நிலை விவகாரத்தில் ஜே.டி.(யு)வை அழகான தோட்டத்தின் வழியே இட்டுச் செல்ல வேண்டும் என்பது ஐமுகூ அரசின் எண்ணம். ஜே.டி(யு)வின் புத்திகூர்மையான தலைமை இதற்கு எப்படி அடிபணிந்தார்கள் என்பது எனக்கு புலப்படவில்லை. எதிர்பாரா விதமாக இந்த தனிப்பட்ட வகைமை நிலையை நோக்கிய அலை ஏற்பட்ட அதே சமயத்தில், ஜே.டி()யு மற்றும் பாஜகவிற்கிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. ஒருமுறை ஜே.டி(யு) தன்னில் உறுதியாக இருந்ததால் இந்த தனிப்பட்ட வகைமை நிலை வரவில்லை. அதைத் தொடர்ந்து சுவயம்வரத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ஜே.டி(யு) இடையேயான பழைய கூட்டணியை காங்கிரஸ் அரசு விரும்பியது. இப்போது காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கிடையே சீட்டு ஒதுக்கீடுகள் பற்றி செய்தித்தாள்கள் வெளியிடும் அறிக்கைகள் சிறிது சிக்கலாகத்தான் தெரிகிறது. ஜேடி(யு) தனிப்பட்ட வகைமை நிலையைக் கோரி மாநில அளவிலான போராட்டத்தை நடத்தியது. ஆனால் இப்போது ஜேடி(யு), பிஹாரின் தனிப்பட்ட வகைமை நிலை விவகாரத்தில் முன்னுக்குப் பின் முரணாக இருந்த கட்சியான காங்கிரசோடு கூட்டணி வைக்க முயற்சி செய்ததையும் ஊடகங்கள் குறிப்பிட்டிருக்கின்றன.
 
 

No comments:

Post a Comment