Sunday 2 March 2014

லக்னோவில் மோடி

கட்டுரையாளர் - அருண் ஜேட்லி, எதிர்கட்சித்தலைவர், மாநிலங்களவை


நரேந்திர மோடியின் லக்னோ பேரணிக்கு மகத்தான ஆதரவு கிடைத்துள்ளது, தில்லிக்கான பாதை உத்திரபிரதேசத்தின் வழியாகவே  அமைந்துள்ளது. நாட்டின் பெரிய மாநிலமான அது, மக்களவைக்கு 80 உறுப்பினர்களை அனுப்பி வைக்கிறது. 1990 களில் பா.ஜ.க வலுப்பெற்ற போது உத்திரபிரதேசம் தான் முக்கிய பங்கு வகித்தது. 1991 தேர்தலில் பா.ஜ.க பிரிக்கப்படாத உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 85 இடங்களில் 52 இடங்களை வென்றது. 1996 ல் இது 58 ஆக (கூட்டணி கட்சிகள் -2) உயர்ந்தது. 1998ல் 50 ஆக இருந்தது. அதன் பிறகு கட்சியின் பலம் தொடர்ந்து குறைந்தது. 1999 ல் பா.ஜ.க 29 இடங்கள் மட்டுமே வென்றது. 2004 மற்றும் 2010 ல் இது பத்து எனும் சொற்ப எண்ணிக்கையாகவே இருந்தது. தில்லியில் பா.ஜ.க ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 1990 களின் பலத்தை அது மீண்டும் பெற்றாக வேண்டும். இது சாத்தியமா? 

உத்தரபிரதேச தேர்தல் களத்தில் போட்டி பா.ஜ.க , எஸ்.பி மற்றும் பி.எஸ்.பி ஆகிய கட்சிகளுக்கு இடையே தான். 2009 ல் காங்கிரஸ் ஆச்சர்யப்படும் வகையில் 22 இடங்களை வென்றது. தற்போதைய சூழலில் அக்கட்சி ஓரஙக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி செய்திகளில் இடம் பிடித்து கவனத்தை ஈர்த்து வருகிறது. எனினும் உத்தரபிரதேச தேர்தலில் அக்கட்சி அதிக தாக்கம் செலுத்துவதற்கில்லை. 

பி.எஸ்.பி மற்றும் எஸ்.பி நிர்வாகத்தில் சிறந்து விளங்கவில்லை. சமாஜ்வாடி கட்சியின் நிர்வாகம் மோசமாக உள்ளது. அது ஆட்சியில் இருக்கும் போது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெடுகிறது. சமூக மற்றும் மத நோக்கிலான பதற்றம் அதிகரித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் வகுப்பு கலவரங்கள் அதிகரித்துள்ளன. பி.எஸ்.பியின் ஆட்சியும் மோசமானதாகவே இருந்தது. அதன் ஆட்சி சர்வாதிகாரத்தனமாக இருந்தது. இந்த இரு கட்சிகளும் தான் கடந்த பத்தாண்டுகளில் ஐ.மு.கூ ஆட்சியில் நீடிக்க பொறுப்பு. ஐ.மு.கூவை அவை பிரதிபலனை எதிர்பார்த்தே ஆதரித்தன. இந்த இரு கட்சிகளின் தலைவர்கள் மீதான சி.பி.ஐ வழக்குகள் தொடர்பாக இவை ஆதரவை எதிர்பார்த்தன.  

உத்தரபிரதேச மக்கள் மனநிலையில் வெளிப்படையான மாற்றம் தெரிகிறது. சாத்திய நோக்கிலான ஆதரவு பின்னுக்குத்தள்ளப்பட்டுள்ளன. இவற்றின் தாக்கம் முற்றிலுமாக விலக்கப்படாவிட்டாலும் குறைவாகவே இருக்கும். நரேந்திர மோடி பங்கேற்ற 8 பேரணிகளுக்கு ஆமோக ஆதரவு கிடைத்தது. இன்று உத்தரபிரதேசத்தில் ஆட்சி நிர்வாகம் தான் முக்கிய பிரச்சனை. ஊக்கம் நிரம்பிய அரசியலுக்கான ஆர்வத்தை உத்திரபிரதேசத்தில் பார்க்க முடிகிறது. உத்தரபிரதேச அரசியிலில் அடிப்படையிலேயே மிகப்பெரிய மாற்றத்தை பார்க்க முடிகிறது. மோடி இந்தக்கூட்டத்தில் தனது உரையை நிறைவு செய்த போது, பிரசூன் ஜோஷியின் கவிதையை மேற்கோள் காட்டிய போது, பேச்சாளர்கள் தினகர்ஜியின் புகழ்பெற்ற கவிதை வரிகளோடு உரையை நிறைவு செய்த 1977 பொதுத்தேர்தல் கூட்டங்களே எனக்கு நினைவுக்கு வந்தன.