Sunday 7 December 2014

திருமதி. தமிழிசை சௌந்தர்ராஜனிடம் சில கேள்விகள்.


கேள்விகள் கேட்பவர் - பத்தமடை சுப்பிரமணியன்.

அன்புள்ள சகோதரி!

1.      திருவள்ளுவர் திருநாள் வைகாசி அனுடம் என எழுதியும் பேசியும் வருபவர்கள் எந்த ஓர் அரசியல் கட்சியையும் சாராதவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா ?

2.      அவர்கள் அரசியல் கட்சி சாந்தவர்கள் என உங்களால் கூற முடியுமா?

3.      நீங்கள் தி.மு.க. சார்பில் நின்று பேசுவதற்காக திருவள்ளுவர் பிறந்த நாள் தொடர்பாக்க் கருத்துக் கூறுபவர்களைப் பார்த்து இதனை அரசியல் ஆக்க வேண்டாம் எனக் கேட்பது எந்த விதத்தில் நியாயம் ?


4.      இதில் எங்கே வந்தது அரசியல் ?

5.      தை மாதம் இரண்டாம் நாள்- திருவள்ளுவர் பிறந்த நாள் என அறிவித்த கலைஞரின் நிலைப்பாடு சரிதான் எனக் கூறுகிறீர்களா ?

6.      கலைஞர் அறிவிப்பில் நியாயம் உண்டு என உங்களால் கூற முடியுமா?

7.      திருவள்ளுவர் பிறந்த நாள் தொடர்பான வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

8.      தமிழ் வருடம் சித்திரையில் தொடங்காது, தை மாதத்தில் தான் தொடங்குகிறது என கலைஞர் அறிவித்த போது – நீங்கள் என்ன செய்தீர்கள்? எங்கே போயிருந்தீர்கள்?

9.      சித்திரை - தை என்ற வருடப் பிறப்பு சர்ச்சையில் தங்கள் நிலைப்பாடு என்ன?

10.   இந்த வருடப் பிறப்பு சர்ச்சை தொடங்கிய காலத்தில் 14-2-14 சனிக்கிழமை தினமணி நாளிதழில் பேராசிரியர் சாமி.தியாகராசன் எழுதிய கட்டுரையைப் படித்துள்ளீர்களா?

11.   1935- 18ஆம் நாள்(வைகாசி அனுடத்தில்) மறைமலை அடிகள் தலைமையில் தமிழகத்தின் பெரும் பேராசிரியர்கள், தமிழ்ச் சான்றோர்கள் அனைவரும் கூடி வள்ளுவர் நாளைக் கொண்டாடியது உங்கட்குத் தெரியுமா?





12.   1935- 19ஆம் தேதி வைகாசி அனுடத்தில் சென்னையில் உள்ள ஏழுகிணறு, ஏழுகிணற்றுத் தெருவில் அறிஞர் அண்ணா தலைமையில் திருவள்ளுவர் திருவிழா கொண்டாடப்பட்டது உங்கட்குத் தெரியுமா?

13.   இலங்கை, கொழும்பில் வாழ்ந்த பண்டிதர் கா.பொ.இரத்தினம் தான்கண்ட தமிழ் மறைக் கழகத்தின் சார்பில் “ வைகாசி அனுடம் வள்ளுவர் திருநாள் – அதுவே தமிழினத்தை ஒன்றுபடுத்தும் நாள்” என அறிவித்து உலகம் முழுதும் விழா நடத்தியது உங்கட்குத் தெரியுமா?

14.   1966- ஜூன் 2-ஆம் நாள் வைகாசி அனுட நாளில் சென்னை மயிலை சமஸ்கிருத கல்லூரி அருகில் இருக்கும் திருவள்ளுவர் சிலையை – அப்போதைய குடியரசுத்தலைவர் டாக்டர் இராதா கிருஷ்ணன் அவர்கள் திறந்து வைத்ததை நீங்கள் அறிவீர்களா?

15.   அப்போதைய முதலமைச்சர் பெரியவர் பக்தவத்சலம் வைகாசி அனுட நாளை வள்ளுவர் திருநாள் எனக் கொண்டாடி அரசு விடுமுறையாக அறிவித்ததை நீங்கள் அறிவீர்களா?

16.   தங்கள் தந்தை இலக்கியச் செல்வர் திரு. குமரி அனந்தனை இது தொடர்பாகக் கேட்டு அறிய முயற்சி மேற் கொண்டீர்களா?

17.   சென்னை, மயிலைத் திருவள்ளுவர் திருக்கோயிலில் வள்ளுவர் அவதாரத்தினமாக  வைகாசி அனுட நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்களா?




18.   வள்ளுவர் பிறந்த நாள் தொடர்பாகக் கருத்துரைப்பவர்களைக் கண்டு நீங்கள் கலந்து பேசினீர்களா?

19.   அவ்வாறு பேசியிருந்தால் அவர்கள் கருத்தில் உங்கட்கு உடன்பாடா? இல்லையா? என்பதை வெளியிட்டீர்களா?

20.   இப்படி எதுவும் நீங்கள் செய்யாமல் இருந்து கொண்டு “இதனை அரசியல் ஆக்க வேண்டாம்” எனச் சொல்வது நீங்கள் தான் இதனை அரசியலாக்குகிறீர்கள் என்ற எண்ணத்தை உண்டாக்கவில்லையா?

21.   உங்கள் அரசியல் ஆதாயத்திற்காகத் திருவள்ளுவர் பிறந்த நாளை வைகாசி அனுடத்தில் கொண்டாடிய மறைமலை அடிகள், திரு.வி.க, டாக்டர் உ.வே.சா, அண்ணா, ஈ.வே.ரா, வையாபுரிப்பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, தெ.பொ.மீ, மா.பொ.சி, கி.வா.ஜ, கல்கி -கிருஷ்ணமூர்த்தி முதலான பெருமக்களை நீங்கள் அவமதிக்கிறீர்களே! உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

22.    “எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்ற நாலாந்தர அரசியல்வாதி போல நீங்கள் பேசலாமா? நீங்கள் இருக்கும் இட்த்திற்கு அழகா?

23.    நீங்கள் கலைஞரின் கருத்துப் பினாமியாக பாரதிய ஜனதா கட்சியில் செயல்படுபவர் எனப் பலர் சொல்வதை உங்கள் பேச்சு உறுதிப்படுத்தவில்லையா?

Saturday 19 April 2014

காவியத் தலைவனுக்கோர் காவியம்

பாரினில் முதன்மையைப் பாரதம் பெற்றிட
பகலும் அல்லும் பணிபல செய்திட்ட
காவியத் தலைவன் காசறு கோமான்
கண்ணெனத் தேசத்தை கட்டிக் காத்தான்



26/11 கொடுமையும் இந்திய-இஸ்ரேல் நட்புறவும்

கடந்த 2008 நவம்பர் 26 அன்று மும்பை நகரில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 200க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். அதில் காவல்துறை கைது செய்த கசாப் இன்றும் மும்பை சிறையில் சகல வசதிகளுடன் இருந்து பின் தூக்கிலிடப்பட்டான். தீவிரவாதிகள் தாக்குதலுக்குத் தேர்வு செய்த இடங்கள் வணிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள். மத இன பேதமற்று அனைத்து மக்களும் அதிகம் கூடும் இடங்கள். ஒரு தொடர்வண்டி நிலையம், ஒரு தேநீர் விடுதி, இரண்டு நட்சத்திர விடுதிகள், ஒரு யூத சமூக மையம் ஆகிய இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாயின.

Friday 18 April 2014

25 கோடிக்கும் 100 கோடிக்கும் சோடி போட்டுக்கிருவோமா?

ஐதராபாத் வில்லன் அக்பருதீன் ஒவைசி பேசிய வெறுப்புப் பேச்சின் இந்த மொழிபெயர்ப்பை முதலில் நான் வெளியிட விரும்பவில்லை.  MIM கட்சியின் வரலாறு கொள்கை ஆகியவற்றை சற்றே விரிவாக அலசி இந்தக் கும்பலின் இந்து வெறுப்புக்கான காரணத்தை வெறுப்பும் பேச்சும் என்ற கட்டுரையில் சொல்லியிருந்தேன்.


இதுதான் இவர்கள். உஷாராக இருங்கள் பந்தங்களே என்று எச்சரிக்கை செய்வதோடு நிறுத்திக் கொள்ளலாம், வெறுப்பு உமிழும் விஷப் பேச்சை மொழிபெயர்த்து வெளியிட வேண்டாம் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் முகநூலில் ராஜீவ் மல்ஹோத்ரா அவர்கள் ஒரு படத்தைப் பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்ததும் அடங்கமாட்டார்கள் இந்தப் பதர்கள் என்று தோன்றியது. வெறுப்பின் உச்சத்தைக் காட்டிய விஷப்பேச்சை மொழிபெயர்த்து வெளியிடும் முடிவுடன் இறங்கிவிட்டேன்.

Thursday 17 April 2014

கவனமாக எழுதுங்கள் தோழரே!


புலமைபித்தன் தமிழக அரசியலில் எழுதிய (வழமையான) ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பால.கௌதமன் அவர்களின் தெளிவான பதில்.
___________________________________________________
நடுநிலையாளராக விமர்சிப்பதற்கு நாணயம் தேவை. ஈ.வே.ராவின் தொண்டன் என்பதால் மட்டுமே நீங்கள் நடுநிலையாளராகி விட முடியாது. ஐயா புலமைப்பித்தன் அவர்களே, மோடி அவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தத்தில் உறுதியாக உள்ளவர்  என்றும் தாங்கள் ஈ.வே.ராவின் கொள்கையை ”அணு அளவும் பிசகாமல் ஏற்றுக் கொண்டவர்” என்றும் 16.04.2014 தமிழக அரசியலில் எழுதி உள்ளீர்கள். இதில் தாங்கள் வைக்கும் குற்றச்சாட்டு காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ் என்பது. காந்தி கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் உங்களால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் வீர சாவர்கர்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னும் பொய்யுரைத்து மெய்ப்பிக்கும் கோயாபல்ஸ் தத்துவத்தை நீங்கள் பின்பற்றலாமா? நீங்கள் இம்மியளவும் பிசகாமல் பின்பற்றும் ஈ.வே.ராவின் தத்துவமும் பொய்யின் அடிப்படையிலானது தானோ?  

Tuesday 15 April 2014

மோடி விளையாட்டும் குஜராத் வெற்றியும்

 2012 குஜராத் சட்ட மன்றத் தேர்தலில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக பெரும் வெற்றி பெற்ற போது எழுதப்பட்ட கட்டுரை. கட்டுரையாளர் அருண்பிரபு.
__________________________________________________________________________________

குஜராத் குஷிமிகுந்து காணப்படுகிறது. மோடி, மஸ்தான்களுக்கு ஆகாதவர், அதனால் அவர் தோற்கவண்டும் என்ற ஆசைகள், பொதுக்கருத்து உருவாக்க முயற்சிகள், உள்குத்து வேலைகள் எல்லாம் பொய்த்துப் போய் கையறு நிலையில் கவலைக்கிடமாகி நிற்க, ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்ற கவிவாக்குப் படி மோடி மேன்மை மிக்க வெற்றியைப் பெற்றிருக்கிறார். 

Sunday 13 April 2014

பிஹாருக்கு தனிப்பட்ட வகைமை நிலை


நாள்: மார்ச் 03, 2014
 
 
திரு அருண் ஜெய்ட்லி
எதிர்க்கட்சி தலைவர் (மாநிலங்களவை)
 
 
 
நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள பல மாநிலங்கள் பொருளாதார ரீதியாக மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை. மேலும் இந்த மாநிலங்கல் இயற்கை சார்ந்த பயன்பாடுகள் ஏதும் இன்றியும் பாதிப்படைந்திருக்கின்றன. அவற்றின் வள ஒருங்கிணைப்பும் போதுமான அளவில் இல்லை. அதனால் அந்த மாநிலங்கள் தங்களுக்கு உயர்ந்த வருவாயையும் உதவிகளையும் பெறும் வகையிலான தனிப்பட்ட வகைமை நிலையை தர வேண்டுவது இயல்பானது.

முரண்பட்டவர் உருவாகிறார்

தேதி : மார்ச் 8, 2014
 


அருண் ஜேட்லி
மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர்
 
 
 
 
 
 
 
இது தேர்தல் நேரம், இப்போது உண்மையான பிரச்சாரத்தில் முழுமூச்சுடன் இறங்குகிறோம். எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுடைய பிரச்சார உத்திகள், கூட்டணிகளை உருவாக்கிக் கொள்வது, வேட்பாளர்களை அறிவிப்பது மற்றும் தேர்தல் யுத்திகளை இறுதி செய்வது போன்றவற்றைத் திட்டமிடுவதில் மிகவும் பிசியாக உள்ளன. நிதி ஆதாரங்களைத் திரட்டுவது மற்றும் பத்திரிகைகள், மின்னணு மற்றும் சமூக ஊடகங்களுக்கான பிரச்சார திட்டங்களை வழங்குவதிலும் ஆற்றல்கள் செலவழிக்கப்பட்டு வருகின்றன. தேர்தல்கள் நடைபெறும் சமயங்களில் மிகப் பெரிய அளவிலான நல்லவர்கள் மக்கள் அரசியலுக்கு வருகிறார்கள்.

காங்கிரசுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே தங்களையே தோற்கடிக்கும் உறவு

தேதி:மார்ச்09, 2014
 

அருண் ஜெட்லி

எதிர்க்கட்சித் தலைவர் (மாநிலங்களவை)
 
 
 
2013 டிசம்பர் மாதம் டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சியும், பா...வும் ஒரு வசதியான உறவு முறையை மேற்கொண்டன. ஆம் ஆத்மி கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. அதன் மாநில தலைவர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட விரும்பினாலும் வேலைநிறுத்தம் செய்ய விரும்பவில்லை. ஷீலா தீக்ஷித் மற்றும் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் மீது எஃப்..ஆர். பதிவு செய்ய காங்கிரஸ் விரும்பியது. சட்ட அங்கீகாரம் இல்லாத காவல்துறை அமைப்பு எஃப்..ஆர். பதிவு செய்தது. பா... எதிர்ப்பு அறிவுஜீவிகள் பிரிவின் ஆதரவை காங்கிரஸ் பெற்றுக்கொண்டது. திரு. நரேந்திர மோதிக்கு சவால் விடும் சாத்தியமுள்ள போட்டியாளராக ஆம் ஆத்மி கட்சி மீது இந்தப் பிரிவு நம்பிக்கை வைத்தது.

மோடி எதிர்ப்புதான் ஒரே உத்தியா?

 நாள்: 18 மார்ச், 2014
 
அருண் ஜெட்லி
(எதிர்க்கட்சி தலைவர், மாநிலங்களவை)
 
 
 
 
 
 
 
2014 பொது தேர்தல் 1971 தேர்தலின் தலைகீழ் திருப்பமாக அமைகிறதா?

தமிழ்நாட்டில் மாறுதல்



 

அருண் ஜெட்லி

(எதிர்க்கட்சித் தலைவர், மாநிலங்களவை)
 
 
 
 
 
மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாதவாறு, காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ள போது, இது விவேகமான முடிவாகும்.

மாவோயிஸ்டுகள் மீண்டும் தாக்குதல்

நாள்-மார்ச்13, 2014
 
 
அருண் ஜெட்லி
(எதிர்க்கட்சித் தலைவர், மாநிலங்களவை)
 
 
 
 
 
மீண்டும் மவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்மத்திய ரிசர்வ் காவல் படையைச் சார்ந்த பல காவலர்களும் சட்டிஸ்கர் காவலர்களும் தங்கள் உயிரை இழந்துள்ளனர். அவர்கள் இந்தியாவைப் பாதுகாக்கும் பொருட்டில் உயிரைத் தந்து தியாகிகளாகியிருக்கிறார்கள்.

உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், ஊடகம் ஆகியவற்றை ஏன் பழிவாங்க வேண்டும்?

தேதி : 14 மார்ச், 2014



அருண் ஜெட்லி

(மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்)
 
 
 
 
 
 
 
கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் நான் கேள்விபட்ட இரண்டு முக்கிய விஷயங்கள் என்னை வருத்தமுற செய்தன.

வலுவான உள்நாட்டு பாதுகாப்புக்கு ஒரு சுதந்திரமான, நேர்மையான தேர்தல் அவசியம்

                                                                                                                           2014 மார்ச் 24
                           
                                                                          அருண் ஜேட்லி
                                   (எதிர்க்கட்சி தலைவர், மாநிலங்களவை)
                                                                                      
                                                                                   





தேர்தல்களின்போது, மூத்த தலைவர்களைத் தாக்கத் திட்டமிட்டிருந்த பாகிஸ்தான் காரனான, உயர்மட்ட இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவன், நேற்று ராஜஸ்தானில் இந்திய பாதுகாப்பு அமைப்புகளால் கைது செய்யப்பட்டான். இந்தக் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைத்து பாதுகாப்பு அமைப்புகளுக்கும் என்னுடைய பாராட்டுகள். இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து அனைவருக்குமே குறிப்பாக, பா.ஜ.க.வைச் சேர்ந்த எங்களுக்கு ஆழ்ந்த கவலை உண்டு. இந்தியா தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ள முடியாது.

திரு அருண் ஜெட்லி பாஜகவின் பிரச்சார கீதத்தை வெளியிட்டுள்ளார்


பாரதீய ஜனதா கட்சி

(மத்திய அலுவலகம்)

11, அசோக் சாலை, புது தில்லி – 110001

தொலை பேசி : 23005700; தொலை நகல்: 23005787

நாள்: மார்ச் 25, 2014
___________________________________________________________________________________


சவுகந்த், நம் கனவு இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதிமொழியை வெளிப்படுத்துகிறது”, என்று ஜெட்லி கூறினார்.

தவறு நிகழ்ந்தால்




நாள்: 17 மார்ச், 2014

அருண் ஜெட்லி

(எதிர்க்கட்சி தலைவர், மாநிலங்களவை)
 
 
 
சில விஷயங்கள் நன்றாக சென்றுகொண்டிருக்கிறது என்றால் அது நன்றாகவே அமையும். அது நன்றாக செல்வதில் ஏதேனும் கடினம் இருந்தால் அவை தகர்ந்துவிடும். அதுதான் ஐமுகூ மற்றும் ராகுல்காந்தி கதையிலும் நிகழ்ந்துள்ளது. பிரச்னைகளை அனுபவித்து, மூத்த தலைவர்களும் கூட மூழ்கும் கப்பலிலிருந்து குதித்து விட முடிவெடுத்துள்ளார்கள். சிலர் போட்டியிட மறுப்பு தெரிவிக்கிறார்கள். மற்றவர்கள் போட்டியிடாததற்கு உடல் நலம் சரியில்லை என்று காரணம் கூறுகிறார்கள். பழிபோடும் விளையாட்டும் தொடங்கியாகிவிட்டது. .

அறநெறி தனிமை


அருண் ஜெட்லி
 

(எதிர்க்கட்சித் தலைவர், மாநிலங்களவை)
 
 
 
 
 
இரண்டு மாதங்களுக்கு முன்பு, குஜராத்தில் “உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கைப் பற்றி விசாரிப்பதற்காக ஒரு விசாரணை ஆணையத்தை அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. இந்த அடிப்படையில் ஏற்கனவே ஒரு விசாரணை ஆணையத்தை குஜராத் அரசு நியமித்தது. மத்திய அரசின் குறுக்கீடு அரசியல் ரீதியிலானது. குஜராத் அரசுக்கும் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் திரு. நரேந்திர மோதிக்கும் தொல்லை கொடுப்பதே அவர்களுடைய எண்ணம்.